உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி பஸ் ஊழியர் மீது தாக்கு

பள்ளி பஸ் ஊழியர் மீது தாக்கு

திருப்பூர் : நல்லுார் அருகே, பள்ளி பஸ்சை மறித்து, டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருப்பூர், நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின், 45. ஊத்துக்குளியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவர். அவர் மனைவி மாசிலாமணி, 40. ஸ்டாலின் இயக்கும் பஸ்சில் உதவியாளர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், பள்ளி வாகனத்தில், மாணவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தனர்.விஜயாபுரம் - நல்லுார் இடையே வந்த போது, வாகனத்தை ஒரு பைக்கில் வந்து மறித்த ஒருவர், ஸ்டாலினிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்து கேட்ட, மாசிலாமணியை தகாத வார்த்தை பேசி, தன்னிடமிருந்த ெஹல்மெட்டால் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.அவ்வழியே வந்தவர்கள் காயமடைந்த மாசிலாமணியை சிகிச்சைக்கு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், மகாலட்சுமி நகரைச் சேர்ந்த விஜய் என்பவர் மீது நல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ