கண்டதும்... காணாததும்! மாயமான சாலை
பொங்கலுார் ; பி.ஏ.பி., பிரதான கால்வாய், 124 கி.மீ., நீளமுள்ளது. அதிகாரிகள் ஜீப்பில் சென்று வாய்க்காலை பார்வையிட காமராஜர் காலத்திலேயே பக்கவாட்டில் சாலை அமைக்கப்படடது, அதில், அதிகாரிகளை தவிர வேறு யாரும் பயணிக்க முடியாது. தற்பொழுது எந்த பாராமரிப்பும் இல்லை. அதிகாரிகளும் சரியாக செல்வது கிடையாது.இதனால், பல இடங்களில் புதர் மண்டியும், குப்பை கொட்டியும் சாலையே காணாமல் போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 'குடி'மகன்கள் அந்த சாலையை திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்கள் நிறைந்து கிடக்கின்றன. வாகனங்களே செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைத்து, பி.ஏ.பி., வாய்க்காலை பாதுகாக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.