உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நேரு யுவ கேந்திரா பொறுப்பாளர்கள் தேர்வு

நேரு யுவ கேந்திரா பொறுப்பாளர்கள் தேர்வு

திருப்பூர் : மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நேருயுவா கேந்திராவுக்கு தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர்களாக, திருப்பூரை சேர்ந்த அருண், சண்முகம் என, இருவர் தேர்வாகி உள்ளனர். ரயில்வே மேம்பாட்டு ஆலோசனைக்குழுவில், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில அரசு பிரதிநிதிகள், ரயில் பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பலர் இடம்பெற்று இருப்பார். இக்குழு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனையை வழங்குவார்கள்.அவ்வகையில், தெற்கு ரயில்வேக்கு, பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை வழங்கும் வகையில் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூரை சேர்ந்த, பாலசுப்ரமணியம், கதிர்வேல், ஆனந்தி, நவசுதன், சிவஆனந்தம், குப்பு ராஜ், மகேஷ், சுந்தரன் மற்றும் சுதாதேவி என, ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை