உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலத்தில் அடைப்பு; கழிவுநீர் தேக்கம்

பாலத்தில் அடைப்பு; கழிவுநீர் தேக்கம்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டுக்குட்பட்ட திருஆவின்குடி நகர், அம்மன் நகர், சிறுபூலுவப்பட்டி மெயின் ரோடு, தாய் மூகாம்பிகை காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சிறு பாலத்தின் வழியாக ரோட்டை கடந்து மறுபுறம் ஆற்றை அடைகிறது. ரோட்டை கடக்கும் சிறு பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி ரோட்டுக்கு வருகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. காலை நேரத்தில் கழிவு நீர் அதிகமாக வருகிறது, ரோட்டு வரும் கழிவு நீரால் ரோட்டில் நடந்து செல்வோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். ரோட்டில் கழிவுநீர் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருவதால், சிறு பாலத்தில் உள்ள அடைப்பை அகற்ற வேண்டும். இல்லாவிடில், சிறு பாலத்தை விரிவுபடுத்தி கழிவுநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை