உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

உடுமலை;திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட் -டீ' கல்லுாரியில், அரசு திட்டங்களில், இலவச தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில், இரண்டு மாத கால, தையல் மற்றும் 'பேட்டர்ன் மேக்கிங்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ள, 18 முதல், 30 வயது வரையுள்ளவர் பயிற்சியில் இணையலாம். இலவச பயிற்சியில், சுயதொழில் துவங்க திட்டமிடும் தொழில் முனைவோருக்கு, அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்தும் விளக்கப்படும்.தொழில் முனைவோர் பயிற்சியில், தொழிலை தேர்ந்தெடுக்கும் வழிகாட்டி, தொழிலுக்கான திட்டம், தொழிலை நிர்வகித்தல், நிதி மேலாண்மை, தொழிலுக்கான திட்ட அறிக்கை, சந்தை வாய்ப்புகள், மத்திய, மாநில அரசின் மானிய கடனுதவி திட்டங்கள் பயிற்றுவிக்கப்படும்.இதுகுறித்து, 'நிப்ட்-டீ' கல்லுாரி திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கண்ணன் கூறுகையில், ''பட்டியல் இன பிரிவினருக்கு, இலவச திறன்மேம்பாட்டு பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியின் நிறைவாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 80728 31041, 99940 84998 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ