உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி; எம்.பி. சுப்பராயன் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி; எம்.பி. சுப்பராயன் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட வளர்ச்சி பணிகளை எம்.பி., சுப்பராயன் பார்வையிட்டார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், தினசரி சந்தை, பூ மார்க்கெட், டவுன்ஹால் அரங்கம், தீரன் சின்னமலை (புதிய) பஸ் நிலையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து பயன்பாட்டில் உள்ள கட்டடங்களின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் இருந்தனர். மேலும், தென்னம்பாளையத்தில் ஆய்வு செய்த போது, வியா பாரிகள் அதிகாலை முதல் வியாபாரம் செய்வதால், இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. மின் கோபுரம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்டவை குறித்து வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !