மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
23-Mar-2025
திருப்பூர்; திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், விளையாட்டு விழா நடந்தது. உடற்கல்வி இயக்குர் (பொறுப்பு) உஷா, வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) தமிழ் மலர், தலைமை வகித்தார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''மாணவியர், கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல்வேறு போட்டிகளில், தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.பின் அவருடன் இணைந்து, காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் நசீம்ஜான், தொழிலதிபர் சரண் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பேசினர். 'புளு ஹவுஸ்' மாணவிகள், சுழற்கோப்பையை தக்க வைத்தனர். விலங்கியல் துறை தலைவர் லிட்டி கொரியா, வேதியியல் துறை தலைவர் நளினி ஆகியோர் பேசினர். மாணவிகள் சிலம்பாட்டம் உள்ளிட்ட வீரி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு, பார்வையாளர்களின் கரகோஷத்தை பெற்றனர். விலங்கியல் துறை தலைவர் லிட்டி கொரியா, வேதியியல் துறை தலைவர் நளினி பேசினர்.விளையட்டுத்துறை செயலர் முத்துமணி நன்றி கூறினார். இந்த வாரம்... விழா வாரம்!
எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுரியில் நேற்று விளையாட்டு விழா நடந்தது, நாளை மறுநாள், (27ம் தேதி), பட்டமேற்பு விழா; 28ம் தேதி, முத்தமிழ் விழா; 29ம் தேதி, காலை, 10:00 மணிக்கு கல்லுாரி ஆண்டு விழா; மதியம், 2:30 மணிக்கு பேரவை நிறைவு விழா நடக்கிறது. எனவே, இந்த வாரம் முழுவதும் விழா வாரமாக இருப்பதால், மாணவியர் உற்சாகத்துடன் கல்லுாரியில் வலம் வருகின்றனர்.
23-Mar-2025