மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜை
06-Sep-2025
அவிநாசி; அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ கரிய காளியம்மன், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ சப்த கன்னிமார், ஸ்ரீ உதிரமுனி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவில் உள்ளது. இதன் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று காலை மங்கள இசை, விநாயகர் புண்யாகம், பஞ்ச கவ்யம், திரவ்யாஹீதி ஆகியவற்றுடன் நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று யாத்ரா தானம், கலச புறப்பாடு நடைபெற்றது. அனைத்துக்கு கோபுர கலசங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கரிய காளியம்மன்,ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
06-Sep-2025