மேலும் செய்திகள்
மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
24-Apr-2025
திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீவீரமாத்தியம்மன், தன்னாசியப்பன் கோவில் 13ம் ஆண்டு பூச்சாட்டு விழா, 11ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது.கடந்த, 13ம் தேதி பொரி சாட்டு நடந்தது. அதனை தொடர்ந்து, கணபதி ேஹாமம், காப்புக்கட்டு பூஜையுடன் கம்பம் நடப்பட்டது. மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. படைக்கலம், முளைப்பாரி, அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், 21ம் தேதி திருக்கல்யாணமும் மாவிளக்கு ஊர்வலமும் கோலாகலமாக நடந்தது.பொங்கல் விழாவையொட்டி, நிறைவு நாளான நேற்று, அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த மாகாளியம்மனை, பக்தர்கள் வழிபட்டனர்.
24-Apr-2025