உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம்; பக்தர்கள் பரவசம்

ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம்; பக்தர்கள் பரவசம்

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.சித்ரா பவுர்ணமி, 75ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 5ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. மறுநாள் ஸ்ரீ சுப்ரமண்யருக்கு மஹா சண்டி ேஹாமம் நடந்தது. படைக்கலம் எடுத்து வரப்பட்டது.கடந்த 8ம் தேதி, அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அம்மனுக்கு அரண்மனை பொங்கல் வைத்து, மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்தி தேர் இழுக்கும் நிகழ்வுகள், 9ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் காவடியாட்டம், அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை திருமணத்தடை நீங்க, நினைத்த காரியம் கைகூட, ஸ்ரீ சுயம்வர பார்வதி யாகம் நடத்தப்பட்டது.ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அம்மனுக்கு பால் அபிேஷகம், சித்ரகுப்தர் பூஜை, வள்ளிகும்மியாட்டம், ஸ்ரீ சக்கர ரதத்தில், ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும், 14ம் தேதி அன்னதானம், மகா அபிேஷகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி