உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீமுனியப்ப சுவாமி கோவில் மஹா கும்பாபிேஷகம்

ஸ்ரீமுனியப்ப சுவாமி கோவில் மஹா கும்பாபிேஷகம்

அவிநாசி; அவிநாசி, மடத்துப்பாளையம் ரோடு, குருந்தங்காடு பகுதியில் ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நிறைவுற்று நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், நுாற்றுக்கும் மேற்பட்டோர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்று முனியப்ப சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி