உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி மாணவர் தேசிய சாதனை

ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி மாணவர் தேசிய சாதனை

திருப்பூர்: மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் 16 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப்போட்டி, செங்கல்பட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற அவிநாசி, ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் தருண், 60 மீ., ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று, தேசிய தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஒடிசா, கலிங்கா அரங்கில் நடந்த தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இவர், 60 மீ., ஓட்டத்தை, 7.04 வினாடிகளில் கடந்து மூன்றாமிடம் பெற்றார். தொடர் ஓட்டத்தில் இவரது அணியினர் இரண்டாம் இடம் பெற காரணமாக அமைந்தார். தருணை, பள்ளி செயலாளர் அக்ஷயா விக்ரம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை