அரசு பள்ளிகளுக்கு உதவிக்கரம்; ஸ்ரீபுரம் அறக்கட்டளை தீர்மானம்
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.அறக்கட்டளையின் தலைவர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை வகித்தார். நிப்ட்-டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், கல்லுாரி தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீபுரம் அறக்கட்டளை செயலாளர் காண்டீபன், ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கந்தசாமி வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார்.கூட்டத்தில், 'திருப்பூரிலுள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பனியன் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும்போது, காப்பீடு தொகை நீங்கலாக, அறக்கட்டளை சார்பில், குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கவேண்டும். கிராமப்புறங்களில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுடன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் சேவை துவக்கவேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.