மாநில கலை திருவிழா அசத்திய மாணவர்கள்
திருப்பூர்: நடப்பு 2024 - 25ம் கல்வியாண்டுக்கான தமிழக அரசு நடத்திய கலை திருவிழா போட்டியில், திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், தாயம்பாளையம் வி.எம்.சி.டி.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வட்டாரம், மாவட்ட போட்டிகளில் முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.மாநில அளவிலான போட்டியில், அப்பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவியர் லோகேஸ்வரன், கார்த்திகேயன், தீபக், தமிழரசு, கதிர்வேல், பவித்ரா, தான்யா, கற்பகம் ஆகியோரின், 'வாகை' அணி, பொம்மலாட்டத்தில், இரண்டாமிடம் பிடித்துள்ளது. அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிஷோர் குமார், அருள்குகன், மாதவன், பத்மேஸ், கவின்குமார், வர்ஷினி, இளவரசி, கவிப்பிரியா ஆகியோரின் 'குறிஞ்சி' அணி, பொம்மலாட்டத்தில் மூன்றாமிடம் பிடித்துள்ளது. கலைத்திருவிழாவில் மாநில அளவில் சாதனைபடைத்த அம்மாணவர்களை பள்ளி செயலர் மாணிக்கம் மற்றும் தலைமை ஆசிரியர் தண்டபாணி ஆகியோர் பாராட்டினர்.