உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிதாக 14 இடங்களில் துணை சுகாதார நிலையம்

புதிதாக 14 இடங்களில் துணை சுகாதார நிலையம்

திருப்பூர்; மக்கள் தொகை அதிகரித்து வரும் பகுதியில், நெருக்கடிக்கு ஏற்ப புதியதாக துணை சுகாதார நிலையங்கள் அமைத்து வட்டார அளவில் நோயாளிகள் உடல் நலம் பேண, தேவையிருப்பின் மருத்துவ முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில், மாநிலத்தில் புதிதாக, 642 இடங்களில் துணை சுகாதார நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட, உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கீழ், தண்ணீர்பந்தல், சின்னக்கரை, நொச்சிபாளையம், அய்யம்பாளையம், அல்லாளபுரம், களிமேடு, மலையப்பாளையம், அறிவொளி நகர், நடுவேலம்பாளையம். அவிநாசி வட்டாரத்துக்கு உட்பட்ட கைகாட்டிபுதுார், காமராஜ்நகர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, நெருப்பெரிச்சல் அடுத்த தோட்டத்துப்பாளையம், கூலிபாளையம், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தட்டான்தோட்டம் ஆகிய, 14 இடங்களில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி