உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திடீர் வலிப்பு; டிரைவர் பலி; விபத்தில் சிக்கிய கல்லுாரி பஸ்

திடீர் வலிப்பு; டிரைவர் பலி; விபத்தில் சிக்கிய கல்லுாரி பஸ்

திருப்பூர்; திருப்பூர் அருகே, டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால், மாணவ, மாணவியருடன் வந்த கல்லுாரி பஸ் மரத்தில் மோதியது; டிரைவர் பலியானார்; ஆறு மாணவர்கள் காயமடைந்தனர். ஈரோட்டில் உள்ள ஒரு கல்லுாரியை சேர்ந்த பஸ், நேற்று காலை, திருப்பூர் நோக்கி வந்தது. ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது, பஸ் டிரைவர் கணேசனுக்கு, 44 திடீர் வலிப்பு ஏற்பட்டது. பஸ்சை நிறுத்த முயன்றார்; முடியவில்லை. ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் மோதி, சுவரில் இடித்து பஸ் நின்றது. வாயில் நுரை தள்ளிய நிலையில், கணேசன் மயக்கமானார். பஸ்சில் இருந்த மாணவ, மாணவியர் கனிஷ்கா, சந்தியா, கீர்த்தி, பவதாரணி, யுவஸ்ரீ, தனசீலன் ஆகிய ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை