உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்

அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்

உடுமலையில், ராஜேந்திரா ரோடு, வ.உ.சி.,வீதி, கச்சேரி வீதி, சீனிவாசா வீதி, வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு, உழவர் சந்தை ரோடு, ராமசாமி நகர் ரயில்வே கேட் ரோடு, என அனைத்து ரோடுகளிலும் நடைபாதை மற்றும் பஸ் ஸ்டாண்டிலும் பயணியர் நடக்கும் பகுதியில் ஆக்கிரமித்து, கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.பஸ் ஸ்டாண்டிலிருந்து, பழநி- பொள்ளாச்சி ரோட்டை கடக்க, 1.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, நடை மேம்பாலம் மற்றும் வழித்தடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பயன்படுத்த முடியாமல் வீணாகி நடைபாதைகள் முழுவதும் மாயமாகியுள்ளது.

ரூ.58 லட்சம் வீணானது!

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரப்பகுதி, கடந்த, 2016ல், விரிவாக்கம் செய்யப்பட்டது. கொழுமம் ரோடு பிரிவில் இருந்து, 840 மீ., துாரத்துக்கும், பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரையும், 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடை பாதை அமைக்கப்பட்டது. தற்போது நடைபாதை பயன்பாட்டில் இல்லை.தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் அலட்சியத்தால், இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'அரசுத்துறைகள் ஒருங்கிணைக்க முடியாததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தனிக்குழு அமைத்து, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை