உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை நகராட்சியில் இந்தாண்டு தாக்கல் உபரி பட்ஜெட்!நகருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

உடுமலை நகராட்சியில் இந்தாண்டு தாக்கல் உபரி பட்ஜெட்!நகருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

உடுமலை:உடுமலை நகராட்சியில், 2024-25ம் ஆண்டுக்கான உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.நகராட்சி வரி வருவாய், ரூ.70 லட்சம், குத்தகை, வணிக வளாக வாடகை உள்ளிட்ட மூலதன நிதி வருவாய், குடிநீர் வழங்கல் மற்றும் பாதாளச்சாக்கடை திட்டம், ஆரம்ப கல்வி நிதி என நகராட்சிக்கு, பல்வேறு இனங்கள் வாயிலாக, உத்தேசமாக, ரூ.7.73 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.இதில், மொத்த செலவுத்தொகையாக ரூ.7.65 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், நகராட்சி உபரியாக, 7.86 லட்சம் ரூபாய் இருக்கும் என பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள்

பட்ஜெட்டில் புதிய நடைமுறையாக, ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்கும், தலா, 12 லட்சம் ரூபாய் வீதம், 33 வார்டு கவுன்சிலர்களுக்கு, ரூ.3.96 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.பொது நிதி வாயிலாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியின் கீழ், பராமரிப்பு, குடிநீர் உள்ளிட்ட பணிகளை நகராட்சி கவுன்சிலர்கள் தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் வழக்கம் போல் வார்டுகளில் மேற்கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழி பூங்கா

நுாற்றாண்டுகள் பழமையான நகராட்சி பழைய அலுவலக வளாகம் முன் தற்போது, தளி பாளையக்காரர் எத்தலப்பர் சிலை நிறுவும் பணி நடந்து வருகிறது. இதே பகுதியில், மாரியம்மன் கோவில் பழைய தேர் பீடம் அமைத்து நிறுவப்பட்டு, செம்மொழி பூங்கா அமைக்க, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுளளது.அதே போல், நகராட்சி அலுவலகம் மற்றும் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளை பராமரிக்க ரூ.50 லட்சம், நகராட்சி வணிக வளாகங்களை பராமரித்து, மேம்படுத்த, ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.நகராட்சியிலுள்ள, 33 வார்டு பகுதிகளிலும் உள்ள மழை நீர் வடிகால்களை, பராமரித்து, மீட்கவும், நிலத்தடி நீர் மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுதத்த, ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரோடு, மின் மயானம் அருகேயுள்ள, நகராட்சிக்கு சொந்தமான மயானம் புதர் மண்டி காணப்படுகிறது. இதனை மீட்டு, மயானம் புதுப்பித்து, தெரு விளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ள, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ