டீ பப்ளிக் பள்ளி மாணவரணி தலைவர்கள் பதவியேற்பு விழா
திருப்பூர்; அவிநாசி, டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 31ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பள்ளி மாணவர் அணி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பு விழா நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். அறங்காவலர் சந்திரன், தேவிசந்திரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, அணி தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தனர். பள்ளி இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன் பள்ளி சிறப்பம்சங்கள் குறித்தும், அறங்காவலர் சந்திரன் தலைமைத்துவ பண்புகள் குறித்தும் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.