பள்ளியில் தமிழ் கண்காட்சி; மாணவர்கள் கலைநிகழ்ச்சி
உடுமலை; உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழ் மன்றத்தின் தமிழ் கண்காட்சி நடந்தது.ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி மற்றும் குருவித்யா ஜூனியர் நர்சரி பள்ளியின் முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழ் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தாளாளர் ராமசாமி துவக்கி வைத்தார்.கண்காட்சியில் பழங்கால பொருட்கள், பனையோலை பொருட்கள், நாணயங்கள், விளையாட்டு பொருட்கள், கல்லணை, தஞ்சை பெரியகோவில், மூலிகைப்பொருட்கள், தானிய பருப்பு உருண்டைகள், பக்தி இலக்கியம் தொடர்பான மாதிரிகள், முருகன் அறுபடை வீடுகளின் மாதிரிகள் காட்சிபடுத்தப்பட்டன.தொடர்ந்து மாணவர்களின் பேச்சு, இசை, கவிதை, நாடகம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பங்கேற்ற மாணவர்களுக்கு, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.