உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும் டாஸ்மாக் : மக்களிடம் கிடைக்கவே கிடைக்காது பாஸ் மார்க்

உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும் டாஸ்மாக் : மக்களிடம் கிடைக்கவே கிடைக்காது பாஸ் மார்க்

மதுவால் சீரழியும் குடும்பங்கள்

பனியன் ஏற்றுமதிக்கு புகழ் பெற்ற நகராக திருப்பூர் இருந்தாலும், எங்கு பார்த்தாலும் தாராளமாக, அதுவும், 24 மணி நேரமும் விற்கப்படும் மதுவால் பல இளைஞர்கள், தொழிலாளர்கள் வேலைகளுக்கு சரியாக செல்லாமல், தங்கள் சம்பளத்தை வீட்டுக்கு கொடுக்காமல் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களை நம்பியுள்ள நிறுவனங்களும் சிரமப்படுகிறது. செய்வது என்னவென்று தெரியாமல், பல கடுங்குற்றங்களுக்கும் இந்த போதை, 'பாதை' போட்டு கொடுத்து விடுகிறது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் வளாகத்தில் வழிப்பறிகளில் ஈடுபடும் சில பெண்கள், ஆண்கள் பயணிகளை நோட்டமிட்டு நைசாக பேசி அருகே உள்ள மதுக்கடை பார்களுக்கு அழைத்து சென்று மது அருந்த வைக்கின்றனர். பின், போதையில் அவர்களது உடமைகளை பறித்து செல்கின்றனர்.சமீபத்தில் அவிநாசியில் தோட்டத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மதுபோதையில், வயதான தம்பதியை ஒருவர் வெட்டி கொலை செய்தார். மறுநாள் போலீசார் விசாரிப்பதை அறிந்து, தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு போதையில் டூவீலரில் சென்று விபத்து ஏற்படுத்தினர். நல்ல வேளையாக விபத்தில் காயத்துடன் தப்பினார். சில நேரங்களில் கட்டுக்கடங்காத போதை கொலையில் முடிகிறது. சில நாட்களுக்கு முன் போதை கும்பலால் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குற்றங்களுக்கு 'பிளான்'

திருப்பூர் மாவட்டத்தில், மாநகரில், 86, புறநகரில், 139 என, மொத்தம், 225 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. அதில், 165 மதுக்கடை பார்களுக்கு மட்டுமே உரிய அனுமதி உள்ளது. மீதமுள்ள, 70 பார்கள் முறையான அனுமதியில்லாமல் ஆளும்கட்சியின் ஆசியோடு நடக்கிறது. பார்களில் சட்டவிரோத கும்பல்கள் பல்வேறு குற்ற செயல்களை திட்டமிடுவது, கஞ்சா, குட்கா போன்றவற்றை விற்பது போன்றவை தாராளமாக நடக்கிறது. அதிலும், காலை, 5:00 மணிக்கே பல கடைகளில், 'சரக்கு' தாராளமாக கிடைக்கிறது என்பதற்கு மதுக்கடை முன், 'மாநாடு' நடத்தும் மக்களே சாட்சி. இதற்கு நகர், புறநகர் என்று விதிவிலக்கு எதுவும் கிடையாது.'சில்லிங்' மதுவிற்பனைக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீசார் முதல் உள்ளூர் ஆளும்கட்சியினர் என பலரின் ஆதரவு உள்ளது. இதற்காக மாதம் தோறும் 'கப்பம்' கட்டி வருகின்றனர். மக்கள் புகார் சொன்னால், நடவடிக்கை என்பது பெரியவில் இல்லை. இப்பிரச்னைகள் தவிர, முக்கிய பிரச்னையாக, 'பார்களில்' இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கவர், டம்ளர் மலைபோல் குவிக்கப்படுவது தான். 'டாஸ்மாக்' பார்களில், கட்டுக்கடங்காத புழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள் விஷயத்தில், மாநகராட்சியின் நடவடிக்கை பூஜ்யமே!முக்கிய பிரச்னையாக, 'பார்களில்' இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கவர், டம்ளர் மலைபோல் குவிக்கப்படுவது தான். 'டாஸ்மாக்' பார்களில், கட்டுக்கடங்காத புழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள் விஷயத்தில், மாநகராட்சியின் நடவடிக்கை பூஜ்யமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sivakumar
மார் 30, 2025 06:54

புதுச்சேரில, ஆந்திராவுல, ஹரியானாவுல, உத்தரப்ரதேசத்துல பாஸ் மார்க் கிடைக்குமா? ஜெயா ஆளும் பொது, பழனிச்சாமி கிடைத்த அதே பாஸ் மார்க் இப்போ கிடைக்காதா?


சமீபத்திய செய்தி