உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துங்காவியில் குடிநீர் தட்டுப்பாடு தீர்வு காண குழுவினர் ஆய்வு

துங்காவியில் குடிநீர் தட்டுப்பாடு தீர்வு காண குழுவினர் ஆய்வு

உடுமலை: துங்காவி ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து, மடத்துக்குளம் எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இத்திட்டத்தில், போதியளவு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.இதனால், ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். ஊராட்சி நிர்வாகம் தரப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை அளிக்கப்பட்டும் பலனில்லை.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என துங்காவி ஊராட்சி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தொடர் புகார்கள் குறித்து மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன், ஊராட்சி தலைவர் உமாதேவி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர்.கூட்டுக்குடிநீர் திட்டத்தின் உடையார்பாளையம் நீரேற்று நிலையத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, தீர்வு குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஆலோசித்தனர்.விரைவில், ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.இதன் வாயிலாக, அங்கு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ