உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆட்டோ டிரைவர் கொலையில் 5 சிறுவர்களுடன் வாலிபர் கைது

ஆட்டோ டிரைவர் கொலையில் 5 சிறுவர்களுடன் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கோல்டன் நகர் கருணாகரபுரியில், நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் உடலை, திருப்பூர் வடக்கு போலீசார் கைப்பற்றினர். இறந்தவர், திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ், 19, என, தெரிந்தது.போலீசார் விசாரித்ததில், அப்பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களுக்குள் கல்லுாரியில் ஏற்பட்ட தகராறில், இருவரும் தனித்தனி குழுவாக செயல்பட்டுள்ளனர். கடந்த வாரம் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பிரகாஷ், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, எதிர்தரப்பு மாணவர்களை தாக்கியுள்ளார். எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு, பிரகாஷை தாக்கி, தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிந்தது.கொலை தொடர்பாக, அதே பகுதி தருண்குமார், 20, சமீபத்தில் பிளஸ் 2 முடித்த, 17 வயதான நான்கு சிறுவர்கள், 16 வயது மாணவர், உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி