வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல முயற்சி / செயல். சிங்கப்பூரில் அனைத்து சாலைகளின் நடுவில் மரங்கள் உள்ளன. இங்கே நடுவில் அரளி செடிகள் மட்டுமே உள்ளன
வளர்ந்து வரும் மக்கள் தொகை, பெருகிவிட்ட தேவைகளுக்கேற்ப கட்டமைப்பிலும் மாற்றம் செய்ய வேண்டியது, காலத்தின் அவசியமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, சாலை விரிவாக்கம் துவங்கி, குடிநீர் வரையிலான தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தாக வேண்டிய அவசியம், அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதே நேரம், 'கட்டமைப்பு மேம்பாடு'க்காக, சுவாசம் தரும் மரங்களையும், மழை தரும் மலைகளையும் வெட்டித் தள்ளுவதென்பது, இயற்கைக்கு முரணானது என்பதையும் மறுப்பதற்கில்லை.இருபுறமும் மரங்கள் வளர்ந்து, சாலையின் பெரும் பகுதி, நிழல் போர்வை சூழ்ந்துள்ள அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையில், விரிவாக்கப்பணி துவங்கியுள்ளது. இதற்காக நிழல் தந்துக்கொண்டிருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.'இத்தகைய சாலை விரிவாக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க, சாலையின் மையப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என்ற யோசனையை, கடந்த ஓராண்டாக முன்னெடுத்து வருகின்றனர், அவிநாசி 'களம்' அறக்கட்டளையினர்.அதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடன், பல்வேறு பொதுநல அமைப்பினரின் ஆதரவுடன் வெள்ளோட்ட முயற்சியாக, அவிநாசி - சேவூர் சாலை மையத்தடுப்பில், 16 மகாகனி மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.'களம்' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:சாலை விரிவாக்கம் என்பது, கால சுழற்சியில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம். சாலையின் எல்லையை தற்போதே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.சாலையின் மையப்பகுதியில், மரக்கன்று நட்டு வளர்ப்பதால், சாலை விரிவாக்கத்தின் போது, வளர்ந்து நிற்கும் மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க தான் சாலையின் நடுவில் மரக்கன்று நட்டு வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.போக்குவரத்து மற்றும் சாலைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில், 3,4 ஆண்டுகளுக்கு நட்டு வைத்துள்ள மரக்கன்றுகளை பராமரிக்க உள்ளோம்.வளரும் மரங்கள் விரைவில் உடையாது: காற்றுக்கு விழாது. நேராக நிமிர்ந்து வளரும். இம்முயற்சி வெற்றி பெற்றால், விரிவாக்கம் செய்யப்படும் எந்தவொரு பகுதியில் உள்ள சாலைகளிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நல்ல முயற்சி / செயல். சிங்கப்பூரில் அனைத்து சாலைகளின் நடுவில் மரங்கள் உள்ளன. இங்கே நடுவில் அரளி செடிகள் மட்டுமே உள்ளன