உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரத்து குறைவால் அவரை விலை உயர்வு

வரத்து குறைவால் அவரை விலை உயர்வு

உடுமலை: வரத்து குறைவால், உடுமலை உழவர்சந்தையில், அவரைக்காய் விலை அதிகரித்துள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்திற்கு பரவலாக அவரை சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியால், இந்த ஆண்டு குறைந்த பரப்பளவில் இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை. உழவர்சந்தைக்கும் வரத்து குறைந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, அவரை கிலோ ரூ.60–70க்கு விற்பனையானது. வரும் வாரங்களில் வரத்து மேலும் குறைந்து, விலை அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்