உள்ளூர் செய்திகள்

சாலை இருள்மயம்

பல்லடம்; பல்லடம் அடுத்த ராயர்பாளையத்தில் இருந்து மெஜஸ்டிக் சர்க்கிள், கவுண்டம்பாளையம் வழியாக கணபதிபாளையம் செல்லும் சாலை உள்ளது. தினமும், மாலை மற்றும் இரவு நேரங்களில், பணி முடிந்து வரும் எண்ணற்ற தொழிலாளர்கள், பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், இந்த வழியாக நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வழித்தடத்தில், தெரு விளக்குகளே இல்லாததால், இரவு நேரங்களில், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை சாதகமாகக் கொண்டு, சமூக விரோதிகள் சிலர், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக, இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில், தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை