உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொல்லியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகம்

தொல்லியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகம்

திருப்பூர்: திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் மன்றம் சார்பில், தொல்லியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், பேச்சு போட்டி நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் காயத்ரி தலைமை வகித்தார். ஆசிரியை கிறிஸ்டி ராஜகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, உடுமலை வரலாற்று ஆய்வு அமைப்பு தலைவர் விஜயலட்சுமி பங்கேற்றார். கருத்தரங்கில்,'தொல்லியல் சார்ந்த களப்பணி குறித்து மாணவ, மாணவியர் கூடுதலான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.வரலாற்று ஆய்வாளர்கள் பணி என்ன, எப்படி பழமை, தொன்மை பொருட்களை உறுதி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தொல்லியல்துறைக்கு முக்கியத்துவம் உண்டு. அது சார்ந்த படிப்புகளில் ஆர்வம் காட்டுங்கள்,' என, அறிவுரை வழங்கப்பட்டது.உதவி தலைமை ஆசிரியை கீதா, சமூகஅறிவியல் ஆசிரியர் ஹூஸ்னேஜபீன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி