திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்; பக்தர்கள் பங்கேற்பு
உடுமலை, ; உடுமலை அருகே சின்னவீரம்பட்டி இந்திரா நகர், செல்வ விநாயகர், ஜக்கம்மாள், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிகள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை சின்னவீரம்பட்டி, இந்திரா நகரிலுள்ள, செல்வ விநாயகர், ஜக்கம்மாள், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 27ம் தேதி, திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்த வருதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.நேற்று காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், தொடர்ந்து, சுவாமிகள் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, அம்மன் திரு வீதி உலா, மதியம், 12:00 மணிக்கு, மகா அபிேஷகம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.