உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவள்ளுவருக்கு கோவில்

திருவள்ளுவருக்கு கோவில்

திருப்பூர், மங்கலம் ரோட்டில், மக்கள் மாமன்றம் செயல்படுகிறது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, திருவள்ளுவருக்கு நான்கடி உயரத்தில், கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் திருவள்ளுவர் உருவ சிலை, 2.50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. உலக திருக்குறள் பேரவை நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.திருவள்ளுவர் சிலை, அங்குள்ள பொது நுாலகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருபவர்கள் திருவள்ளுவரை வணங்கி விட்டு, அங்குள்ள பதிவேட்டில் தங்கள் பெயர், தங்களுக்கு பிடித்த குறள் போன்றவை குறித்து எழுதலாம். திருக்குறள் புத்தகமும் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மக்கள் மாமன்ற நிர்வாகிகள் கூறுகையில்,' திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், திருப்பூரில், திருவள்ளுவருக்கு கோவில் அமைக்கப்பட்டுள் ளது. எந்தவொரு மதம் சார்ந்தும் வள்ளுவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதால், இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் அவரது கோவிலிலும் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சடங்கு முறைகளில் வழிபாடுகள் கிடையாது. உலகப் பொதுமறை எழுதியவருக்குப் பொதுவான வழிபாடுகள் மட்டுமேநடத்துவோம். யாவரும் வரலாம். திருவள்ளுவரையும், திருக்குறளையும் அறிந்து கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை