உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழக ஜூனியர் கபடி அணியில் இடம்பெற்ற திருப்பூர் மாணவியர்

தமிழக ஜூனியர் கபடி அணியில் இடம்பெற்ற திருப்பூர் மாணவியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஜூனியர் பெண்கள் அணியில் இடம் பெற்ற கதிஜாபீவி, புவனேஸ்வரி இருவரும் தமிழக ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு கடந்த டிச., 23 முதல் ஜன., 5ம் தேதி வரை சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. இதில், சிறப்பாக திறமை காட்டிய இருவரும், வரும், 8ம் தேதி முதல், 11ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.தமிழக அணியில் இடம் பிடித்து, தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள கதிஜாபீவி, புவனேஸ்வரி இருவரும் ஈரோடு மாவட்டம், கோபி, பி.கே.ஆர்., கல்லுாரி பட்டப்படிப்பு இறுதியாண்டு பயின்று வருகிறார்கள்.தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா கபடி கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கபடி சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். கபடி கழக மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம், மாவட்ட கபடி கழக தலைவர் மனோகர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, புரவலர்கள் பிரேமா மணி, துணைத் தலைவர்கள் ராமதாஸ், செல்வராஜ், கவுன்சிலர் நாகராஜன், பி.ஆர்.ஓ., சிவபாலன், தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், வளர்ச்சிக்குழு தலைவர் கார்லிக் ராஜூ, துணை செயலாளர்கள் வாலீசன், சின்னு, செல்வராஜ், பயிற்சியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மாணவியரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை