உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

உடுமலைn ஆன்மிகம் nபங்குனி மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்.நித்தியபடி பூஜை>>காலை, 7:00 மணி.* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.*ஸ்ரீ வெங்கடேசபெருமாள், அடிவள்ளி>> காலை, 6:00 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.சிறப்பு வழிபாடு*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.* ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில், சின்ன வாளவாடி>>காலை, 9:00 மணி.பொள்ளாச்சிn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.*மாரியம்மன்கோவில்,கடைவீதி,பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.*மாகாளியம்மன்கோவில்,கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.*ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார்,பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.*அமணீஸ்வரர்கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.மண்டல பூஜைசெல்வ விநாயகர், மணியாச்சி அம்மன்கோவில்,சி.கருமாண்டக்கவுண்டனுார்,பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,10:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nமண்டல பூஜை* சக்தி விநாயகர், உச்சி மாகாளியம்மன் கோவில், குருசாமியூர், கோடங்கிபட்டி, ஆனைமலை>>காலை 9:00 மணி.சிறப்பு வழிபாடு* மாசாணியம்மன்கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்புஅபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜை>>காலை 6:00 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்காரபூஜை >> காலை,6:00 மணி.*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை>> காலை,6:00 மணி.*முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார்கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:30 மணி.* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> காலை, 6:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*சுப்ரமணியசுவாமி கோவில்,வால்பாறை.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை,5:30மணி.*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.*பொள்ளாச்சி டி.இ.எல்.சி., அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் யோபு ஞானனையா தலைமை வகித்தார். டி.இ.எல்.சி., திருச்சபை உப தலைவர் ஸ்டன்லி தேவகுமார் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் சுகந்தி வரவேற்றார்.முன்னாள் தலைமையாசிரியர் ராஜேந்திரன், கவுன்சிலர் சாந்தலிங்கம் ஆகியோர் பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் அனிதா மேரி நன்றி கூறினார்.* ஆனைமலை, கம்பாலபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களின், காகித உடை நடனம், காவடிஆட்டம், சிவன்,பார்வதி நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.* கோட்டூர் (உருது) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் தலைமை வகித்தார். கல்வி ஆர்வலர் காளீஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, கோட்டூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை மாவட்ட வேளாண் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.* ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா, பஞ்சபூதங்களை போற்றும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார்.யோகா, கல்வியா, வீரமா, செல்வமா என விழிப்புணர்வு நாடகம், ஐம்பெரும் பூதங்கள் அனைவருக்கும் சொந்தம் என்ற நடனம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தினர். பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.* பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பொன்விழா, மலர் வெளியீட்டு விழா, பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் பூங்கொடி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் பாக்கியலட்சுமி பேசினார். பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பொன்விழா மலர், 'பள்ளி எழுச்சி' என்ற பெயரில் முன்னாள் ஆசிரியர்கள் வெளியிட்டனர். மாணவ, மாணவியருக்கு புதிததாக டேலண்ட் ேஷா என்ற நிகழ்வு நடத்தி, மாணவர்களின் பல திறமைகள் வெளிக்கொணரப்பட்டது; அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர்கள் வைஷ்ணவி, சண்முகப்பிரியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனகவள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பிரகதாம்பாள் நன்றி கூறினார்.* கிணத்துக்கடவு, கோதாவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு, வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின், கலை நிகழ்ச்சிகளில் நடந்தது.இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், கோதவாடி முன்னாள் ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.* உடுமலை, கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில், பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மாறுவேடப்போட்டி, தலைகீழாக வாய்ப்பாடு கூறுதல், தமிழ் மற்றும் ஆங்கில பழமொழி கூறுதல், வில்லுப்பாட்டு, இசைக்கருவி வாசித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் லதா, நாகவேணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஆசிரியர் காயத்ரி நன்றி கூறினார்.* பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தவிழாவில் தலைமையாசிரியர் சரஸ்வதி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ரோஜாவானரசி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அருள்ஜோதி முன்னிலை வகித்தார். முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ் சொற்பொழிவு நிகழ்த்தினர். ஆசிரியர் வசந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் ஈஸ்வரி, மேகலா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர் பங்கேற்றனர்.* ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.விழாவில் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் வரவேற்றார். ஆசிரியர் கல்பனா ஆண்டறிக்கை வாசித்தார்.வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் விழாவை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினர். சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் சத்யராஜ் முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முருகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா, திறன் பலகை திறப்பு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஏஞ்சலின்பிருந்தா விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உருளைகிழங்கு எடுத்தல், இசை நாற்காலி, லெமன் ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள் முன்னிலை வகித்தனர்.ஆண்டு விழாவில் ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்றார். தலைமையாசிரியர் தாரணி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.பல்வேறு பள்ளி தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், பல்வேறு சங்கத்தினர் ஆண்டுவிழாவில் பங்கேற்றனர். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை