உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தக்காளி விலை சரிந்தது காய்கறி விலையும் குறைகிறது

 தக்காளி விலை சரிந்தது காய்கறி விலையும் குறைகிறது

திருப்பூர்: தக்காளி விலை சரிந்துள்ளதால், பிற காய்கறிகளின் விலை குறைய துவங்கியுள்ளது. நாட்டு காய்கறிகளுடன், மலை காய்கறிகளும் விலை குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். ஜன. முதல் வாரத்தில், தக்காளி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தது. குறிப்பாக, தக்காளி கிலோ, 60 ரூபாய்க்கும், அவரை, 90, பீன்ஸ், 80, காரட், 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. காய்கறி விலை உயர்வால், சாம்பாருக்கு விலை குறைவான என்ன காய்கறி வாங்கலாம் என பெண்கள் தேடினர். இந்நிலையில், இந்த வாரம் வெளிமாநில வரத்து அதிகரிப்பால், தக்காளி குவிகிறது. இதனால், விலை குறைய துவங்கியுள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்றது. வரத்து குறைந்ததால், முருங்கை, கிலோ, 150 ரூபாய். அவரை கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது; தற்போது, 50 ரூபாய். அதே நேரம், பாகற்காய், பீர்க்கன்காய், முள்ளங்கி விலையில் மாற்றமில்லை. எலுமிச்சை விலை மேலும் குறைந்து, 60 ரூபாய். குளிர்ந்த சீதோஷ்ண நிலை தொடர்ந்தால், மழை இல்லாததால், மலை மாவட்டங்களில் இருந்து வரத்து சீராகியுள்ளது. இதனால், கிலோவுக்கு, பத்து ரூபாய் குறைந்து உருளைக்கிழங்கு, 40 ரூபாய், காரட் மற்றும் பீன்ஸ் கிலோவுக்கு, 20 குறைந்து கிலோ, 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. முந்தைய வாரத்தை விட நடப்பு வாரம் பெரும்பாலான காய்கறிகள் விலை ஓரளவு குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை