உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிற்சங்கத்தினர் ஆலோசனை

தொழிற்சங்கத்தினர் ஆலோசனை

ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்துக்கு தொழிலாளர்களை திரட்டுவது தொடர்பாக, பல்லடம், மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எம்.எல்.எப்., செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., சார்பில் பரமசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பொது வேலை நிறுத்தத்தின் போது, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன்பு இருந்து பேரணியாக சென்று தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி