வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சாலைகளை சோப்புப் போட்டுக் கழுவவும்.
வந்து போனால் திரும்ப அசுத்தமாகிவிடும்
மேலும் செய்திகள்
துணை முதல்வர் ஆய்வுக்கு ஆயத்தமாகும் அதிகாரிகள்
15-Dec-2024
திருப்பூர்;துணை முதல்வர் உதயநிதி வருகை முன்னிட்டு நகரப் பகுதியில் துாய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.வரும், 19ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி திருப்பூர் மாவட்டத்துக்கு வருகிறார். அன்று காலை, உடுமலையில் நடைபெறும், கருணாநிதி நுாற்றாண்டு விழா நினைவு நுாலகத் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்கிறார்.துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அவர் திருப்பூர் வரவுள்ளார். அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்க கட்சியினர் மற்றும் அமைப்புகள் தயாராகி வருகின்றன. துணை முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ள கலெக்டர் அலுவலக வளாகம் கடந்த இரு நாட்களாக சுத்தம் செய்து, தயார்படுத்தும் பணி நடக்கிறது. வளாகத்தைச் சுற்றிலும் அடர்ந்து வளர்ந்து கிடக்கும் புதர்கள், தேங்கி கிடக்கும் மண் குவியல்கள் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.அவர் செல்லும் பிரதான ரோடுகள் துாய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம், குமார் நகர் பகுதிகளில் ரோட்டில் தேங்கி நிற்கும் மண் குவியல்கள், குப்பைகள் ஆகியன அகற்றி சுத்தப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
சாலைகளை சோப்புப் போட்டுக் கழுவவும்.
வந்து போனால் திரும்ப அசுத்தமாகிவிடும்
15-Dec-2024