19ல் உதயநிதி திருப்பூர் வருகை
திருப்பூர்: துணை முதல்வர் உதயநிதி வரும் 19ம் தேதி திருப்பூர் வரவுள்ளார்.விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்ற பின் உதயநிதி திருப்பூர் வந்தார். மாநகராட்சியின் 4 வது குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து, டவுன்ஹால் மாநாட்டு அரங்கத்தை திறந்து வைத்தும், நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.தற்போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட பின் முதன் முறையாக திருப்பூர் வரவுள்ளார். வரும் 19ம் தேதி, திருப்பூர் வரும் அவர், கலெக்டர் அலுவலகத்தில், அரசு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளார். மேலும், அரசுத் திட்டங்களில் பங்களிப்பு செய்து வரும் பங்கேற்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதில் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.ஆய்வுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள திருப்பூர் கலெக்டருக்கு, சிறப்பு திட்ட செயலாக்க துறை அரசு செயலர் அறிவுறுத்தியுள்ளார்.