மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு : கலெக்டர் உத்தரவு
07-May-2025
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், முதிர்வுத்தொகை பெற கண்டறிய முடியாதவர்களின் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், ஒரு பெண் குழந்தை எனில், 50 ஆயிரம் ரூபாய், இரண்டு பெண் குழந்தை எனில், தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும், வட்டியுடன் முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெறவேண்டி விண்ணப்பிக்காத மற்றும் கண்டறிய இயலாத பயனாளிகள் விவரம், https://tiruppur.nic.inஎன்கிற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.முதிர்வுத்தொகை பெறவேண்டிய பயனாளிகள், தங்கள் விவரங்களை சரிபார்த்து, சேமிப்பு பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார், பேங்க் பாஸ்புக், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளவேண்டும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், கண்டறிய இயலாத பயனாளிகள் பட்டியலில், மொத்தம் 3,497 பேர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
07-May-2025