உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதுகாப்பாற்ற குட்டை; அதிகாரிகள் அசட்டை

பாதுகாப்பாற்ற குட்டை; அதிகாரிகள் அசட்டை

திருப்பூர், ; திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, தொட்டிய மண்ணரை பகுதியில் பாதுகாப்பாற்ற முறையில் உள்ள குட்டையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ரோட்டில் இருந்து சில அடி துாரத்தில் உள்ள கிணறு, அதிக ஆழம் கொண்டதாக உள்ள இதில், மேல் பகுதி வரைக்கு தண்ணீர் காணப்படுகிறது. கிணற்றை சுற்றிலும் எந்த விதமான தடுப்பு சுவர்களும் அமைக்கப்படாமல் உள்ளது. கிணற்றுக்கு எதிர் திசையில் ரோட்டின் ஓரமாக சிறிய குட்டை உள்ளது. ரோட்டோரம் எவ்வித பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தப்படாமல் உள்ள கிணறு, குட்டையால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, பாதுகாப்பாற்ற முறையில் உள்ள கிணறு மற்றும் குட்டையை மூட அல்லது அதையொட்டி தடுப்புகளை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை