மேலும் செய்திகள்
கடைக்குள் புகுந்த கிரேன்
11-Oct-2025
பல்லடம்: பல்லடம் வழியாக செல்லும் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை, கொச்சி, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இவ்வாறு, பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான வழித்தடமாக பல்லடம் உள்ளதால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். தீபாவளியை முன்னிட்டு, அரசு, தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர், பல்வேறு பகுதிகளிலிருந்து சொந்த ஊருக்கு சென்றதால், தேசிய நெடுஞ்சாலை வழக்கத்தைக் காட்டிலும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. பல்லடம்- கொச்சி ரோடு பிரிவு, அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு சந்திப்பு, நால்ரோடு சிக்னல், தாராபுரம் ரோடு பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், வாகனங்கள் அடுத்தடுத்து அணிவகுத்து வந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன பேரணி நடந்தது. நெரிசலுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றதால், வாகன ஓட்டிகள், பல்லடம் நகரப் பகுதியை கடக்க, 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. 80 சதவீதம் பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், இனி ஒரு வாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி, தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி தான் இருக்கும்.
11-Oct-2025