வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் மெஷின்கள் பின்னலாடை உற்பத்தியை எளிமையாக்கும்
தி ருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், குறைந்த தொழிலாளர்களை கொண்டு, அதிக உற்பத்தி மேற்கொள்ள வசதியாக, அதிநவீன தையல் இயந்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் ஆகின்றன; அவற்றை, 'வெர்டெக்ஸ்'ஆட்டோமேஷன்ஸ் நிறுவனம், பனியன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகிறது. 'நிட்ேஷா' கண்காட்சியில் இடம்பெற்றுள்ள, 'வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ், வாடிக்கையாளரின் பேராதரவை பெற்றுள்ளது. வெர்டெக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது: முன்னணி 'பிராண்டடு' தையல் இயந்திரங்களை, தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக, திருப்பூரில், அதிக அளவு மெஷின்கள் விற்பனை நடக்கிறது. ஆடை வடிவமைப்பில், பல்வேறு புதிய மெஷின்கள் வந்துள்ளன. 'போலோ 'டி-சர்ட்' உற்பத்தியில், பாக்கெட் மெஷின், 'பிளாய்க்கெட்' மெஷின், புதிய பட்டன் ேஹால் இன்டெக்சிங் மெஷின், 'பாட்டம் ஹம்மிங்' 'பட்டன் ஸ்டிச் இன்டெக்சிங்', என, 10 வகை தையல் மெஷின்களை வழங்கி வருகிறோம். தற்போது, 'டி -சர்ட்'டை மடித்து, பேக்கிங் செய்து கொடுக்கும் மெஷின் வந்துள்ளது; ஒருமணி நேரத்துக்கு 450 'டிசர்ட்'கள் பேக்கிங் செய்ய முடியும். 'உள்ளாடைகள் தயாரிப்புக்காக, 'ஆட்டோமேடிக் டாப் எலாஸ்டிக் அட்டாச்சிங் மெஷின், எலாஸ்டிக் ஜாய்னிங் மெஷின்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள தையல் மெஷின்களுக்கு, 'ஆட்டோமேஷன்' தொழில்நுட்பத்தை அப்டேட் செய்யும் சேவையையும் செய்து கொடுக்கிறோம். மேலும் விவரங்களுக்கு, 98944 56000, என்ற எண்ணில் அணுகலாம்.