உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை சிகிச்சை முகாம்; தாது உப்பு கலவை வழங்கல்

கால்நடை சிகிச்சை முகாம்; தாது உப்பு கலவை வழங்கல்

உடுமலை: உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியின் கால்நடை சிகிச்சையியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், தொட்டம்பட்டி கிராமத்தில், கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். முகாமில், கறவை மாடுகளுக்கு அனைத்து வகை சிகிச்சைகளும் வழங்கப்பட்டது; சினை ஊசி செலுத்தப்பட்டது. ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது.கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது; பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கால்நடை வளர்ப்பு குறித்த கண்காட்சியும் நடந்தது. முகாமில் பங்கேற்ற கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை