மேலும் செய்திகள்
பணிச்சுமையால் அவதியுறும் உடற்கல்வி ஆசிரியர்கள்
21-Nov-2024
திருப்பூர்; திருப்பூர், குளத்துப்பாளையம், வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத்தாளாளர் சுபாஷ் வரவேற்றார். குமரன் கல்லுாரி முதல்வர் வசந்தி கொடியேற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஒலிம்பிக் தீபமேற்றி சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் தனபாக்கியம் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாக அலுவலர் சிவகுருநாதன் வாழ்த்துரை வழங்கினார். கிரீன் ஹவுஸ் மாணவ, மாணவியர் கோப்பை வென்றனர். ரெட் ஹவுஸ் இரண்டாமிடம் பெற்றது.அறக்கட்டளை உறுப்பினர் தீபலட்சுமி, துணைத்தாளாளர் தரணீதரன் தண்டபாணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
21-Nov-2024