உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விஜயமங்கலம் பாரதி மெட்ரிக்தேர்ச்சி விகிதம் அசத்தல்

விஜயமங்கலம் பாரதி மெட்ரிக்தேர்ச்சி விகிதம் அசத்தல்

திருப்பூர்; பெருந்துறை விஜயமங்கலம், பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய, 472 மாணவ, மாணவியரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவி சந்தியா, 600க்கு 595 மதிப்பெண் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில், முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் ராகுல், பிரபா ஆகியோர் தலா, 592 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், நவீனா, பவிஸ்கா, ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா, 591 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 8 பேர், 590 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 27 பேர், 580 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 102 பேர், 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்றனர்.மாணவர் ராகுல், பொறியியல் 'கட் ஆப்' மதிப்பெண், 199.5 பெற்று, முதலிடம் பெற்றார். 23 மாணவர்கள், 195 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், 50 மாணவர்கள், 190 'கட் ஆப்' மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். கணித பாடத்தில், 18 பேர், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பயன்பாடு பாடத்தில், 30 பேர் என, 78 மாணவர்கள், பல்வேறு பாடங்களில், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்கள், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களை, ஊக்கமளித்த பெற்றோரை பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில் குமார், துணை முதல்வர் சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை