மேலும் செய்திகள்
பெண்களுக்கான பெட்டிகளில் ரயில்வே போலீசார் சோதனை
10-Feb-2025
திருப்பூர்; முன்பதிவில்லா பயணிகளுக்காக, சந்திரகாசி - மங்களூரு இடையே இயங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டு ஏ.சி., பெட்டிகளுக்கு மாற்றாக பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.வியாழன் தோறும் மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசியில் இருந்து புறப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22851) சனிக்கிழமை கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தடைகிறது.திருப்பதியில் இருந்து தமிழகத்தில் காட்பாடி வரும் ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஸ்டேஷன்களில் நின்று பாலக்காடு வழியாக கேரள மாநிலங்களில் பயணித்து, மங்களூரு செல்கிறது.நாட்டில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களை கடந்து, 39 ஸ்டேஷன்கள் வழியாக, 2,489 கி.மீ., பயணிக்கிறது; நாட்டின் அதிகமான துாரம் பயணிக்கும் ரயில்களில் ஒன்றாக உள்ளது. தற்போது, 22 பெட்டிகள் உள்ளன.முன்புறம், இன்ஜின் பெட்டியை ஒட்டி மட்டும் முன்பதிவில்லா பொது பெட்டி இரண்டு உள்ளது. மற்ற, 19 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக உள்ளன. இருப்பினும், இந்த ரயிலுக்கான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், தென்கிழக்கு ரயில்வே, இரண்டு ஏ.சி., மூன்றடுக்கு பெட்டிகளை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக இரண்டு பொது பெட்டிகளை சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது.வரும் ஏப்ரல், 3ம் தேதி சந்திரகாசியில் இருந்து புறப்படும் ரயிலிலும், ஏப்ரல், 5ம் தேதி, மங்களூருவில் இருந்து புறப்படும் ரயிலும், ஏ.சி., பெட்டிக்கு பதிலாக, முன்பதிவில்லா பொது பெட்டி சேர்க்கப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை ரயில், நான்கு முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-Feb-2025