மேலும் செய்திகள்
மாணவர் பேரவை துவக்க விழா
24-Jul-2025
பல்லடம்; ''பல்வேறு கழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் இல்லை'' என, சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில், சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலை உதவி பேராசிரியர் ராஜ்குமார் பேசியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்புகளால், புவியின் வெப்பநிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. இந்த மாற்றம் தொடர்ந்தால், பூமி, வாழத் தகுதியற்றதாக கிரகமாக மாறிவிடும். இதேபோல், திட மற்றும் திரவ கழிவுகளுக்கு இணையாக, தற்போது மின்னணு கழிவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த கழிவுகளை குறைப்பதற்கான முறையான தொழில்நுட்ப முறைகள் தற்போது இல்லை. கழிவுகளை குறைப்பது மற்றும் மறுசுழற்சி செய்வற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மீட்டெடுக்க முடியாத மற்றும் மீட்டெடுக்கக்கூடிய ஆற்றல்களை எரிசக்திகளாக பயன்படுத்துகிறோம். சோலார், காற்றாலை உள்ளிட்ட மீட்டெடுக்கக்கூடிய ஆற்றல்கள் பல்வேறு முறையில் பயன் தருகின்றன. பல்வேறு நச்சு வாயுக்களாலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் எரிபொருள்களான பெட்ரோல், டீசல் மூலம் வெளியேறும் நச்சு வாயுக்கள், ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார். துறை பேராசிரியை பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
24-Jul-2025