உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களிடம் கம்பனை கொண்டு சேர்க்க வேண்டும்!

மாணவர்களிடம் கம்பனை கொண்டு சேர்க்க வேண்டும்!

தமிழின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றி வளர்த்தவர்களில் கம்பனுக்கு முக்கிய இடமுண்டு. கம்பனை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடம் கொண்டு போய் சேர்ப்பது, பேச்சு, இலக்கியத்தில் சிறந்து விளங்கும் பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த, 50 ஆண்டுக்கு முன் சென்னை கம்பன் கழகம் துவங்கப்பட்டது.பொன் விழா கொண்டாடும் அக்கழகம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கம்பன் கழக பொன்விழாவை சென்னையில் நடத்தின. இதில், திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு, 'கம்பன் பணிச்செம்மல் விருது' வழங்கப்பட்டது. விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் சாமிநாதன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, சாரதாநம்பி ஆரூரன், டாக்டர் பிரேமா, பால சீனிவாசன், ராமநாதன், ரமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இது குறித்து, ராமகிருஷ்ணன் கூறுகையில், ''கல்லுாரி காலத்தில் கம்பனை கைப்பற்றி உரையாற்ற பழகி, 2008ல் துவங்கி, திருப்பூரில் மாணாக்கர், மகளிர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கம்பனை அறிமுகம் செய்து, தமிழும், கம்பனும் இரு கண்கள் என இடைவிடாது பணி மேற்கொண்டு வருவதற்கு இந்த விருது வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மத்தியில், இன்னும் அதிகமாக கம்பனை கொண்டு சென்று சேர்க்க வேண்டியிருக்கிறது; அதற்கான முன்னெடுப்பு எடுக்க உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை