செக்யூரிட்டிக்கு வலை
திருப்பூர்; திருப்பூரில் போலி துப்பாக்கி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்திருந்து தலைமறைவான தனியார் வங்கி செக்யூரிட்டியை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீ உமேஷ் சிங், 55. இவர், அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் தங்கி, பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். அவர் வைத்திருக்கும் துப்பாக்கியின் உரிமம் போலியானது என திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, ஸ்ரீ உமேஷ்சிங்கிடம் விசாரித்தனர். அதில், கடந்த,2015ம் ஆண்டு உதய்பூரில் இருந்து துப்பாக்கி உரிமம் பெற்றதாகவும், பெங்களூரு ஆயுத கிடங்கில் துப்பாக்கி வங்கியதாக தெரிவித்தார். 2025 டிச., வரை ஜம்மு காஷ்மீர் - ராம்பன் நகர் கூடுதல் மாவட்ட நீதிபதியால் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவரிடமிருந்து உரிம ஆணவத்தை வாங்கி சரிபார்க்க சென்றனர். தொடர்ந்து, அந்த ஆவணம் போலியானது என்பது தெரிந்தது. அவரை கைது செய்ய வங்கிக்கு போலீசார் சென்றபோது, துப்பாக்கியுடன் தலைமறைவானது தெரிந்தது. ஸ்ரீஉமேஷ் சிங் மீது வழக்குபதிவு செய்து திருப்பூர் தெற்கு போலீசார் தேடி வருகின்றனர்.