உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி 

ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி 

திருப்பூர் : ஹிந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு காரணமாக ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு 'இண்டி' கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பதட்டம் அடைந்துள்ளன என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது; வரும், 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடை ஹிந்து முன்னணி நடத்துகிறது. இதில், லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசம் படிக்கவுள்ளனர். முருக பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்கு அரசியல் மாநாடாக தெரிகிறது. ஹிந்து முன்னணி நடத்தும் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரும் என்ற பயம்ம் பதட்டம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பேச்சு தற்போது, ஹிந்துக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறியள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gajageswari
ஜூன் 10, 2025 11:11

கட்ட பஞ்சாயத்து செய்ய


Ramasamy V.savadamuthu
ஜூன் 09, 2025 22:53

Ohm saravana bhava


Ramasamy V.savadamuthu
ஜூன் 09, 2025 22:52

ஓம் நமசிவாய ஓம் சரவண பவ


Vignesh
ஜூன் 09, 2025 12:36

முருக இந்த பசங்க அதுவும் சந்து முன்னணி பக்தி மிஞ்சிய பக்தி


BALAMURUGAN NAGARETHINAM
ஜூன் 09, 2025 11:39

அப்படியானால் இந்த மாநாடு முடிந்தவுடன் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக கருதப்பட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அப்படித்தானே


பேசும் தமிழன்
ஜூன் 09, 2025 08:31

இந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவது அவர்களுக்கு ஆபத்து என்பதால் தான் .... கத்தி கதறிக் கொண்டு இருக்கிறார்கள் .... இண்டி கூட்டணி ஆட்களுக்கு வரும் தேர்தலிழ்மக்கள் எப்படியும் ஆப்பு அடிக்கத்தான் போகிறார்கள் ....மாநாட்டின் மூலம் அது உறுதியாகி விடும் என்பதால் தான் இந்த கதறல் அவர்களிடம் இருந்து வருகிறது.


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 06:16

சமூக ரீதியாக நடுநிலை கோஷ்டியால் தாக்கப்படுவதால் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய காலம். விகிதாச்சாரம் குறைவதால் வீட்டுக்கு குறைந்தபட்சம் மூன்று பிள்ளைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரையாவது ஆர்எஸ்எஸ்-ஸுக்கு பயிற்சிக்கு அனுப்பவேண்டும். ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கிராமம் தோறும் பிரபலப்படுத்த வேண்டும்.


முருகன்
ஜூன் 09, 2025 07:42

அதற்கு நீங்கள் தமிழகம் வர வேண்டும்


Raj Kamal
ஜூன் 09, 2025 08:33

நலன்கள் ஏன் பெருக்க வேண்டும்? இருப்பதை கரை சேர்க்கவே நாக்கு தள்ளுகிறது. நீங்கள் தான் உழைக்கவேண்டும், உழைத்து உற்பத்தியை பெருக்கவேண்டும்.


Gajageswari
ஜூன் 09, 2025 05:33

எதற்கு போராட்டம் என்று தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசாமல் தலைவர் இப்படி பட்ட மக்கள் உள்ள தமிழ்நாடு


முருகன்
ஜூன் 09, 2025 05:20

ஒரு அரசியல் கட்சி மட்டும் தங்கள் மாநாடு மாதிரி பேசுவது மட்டும் சாரியா கடவுள் அனைத்து இந்துக்களுக்கும் பொதுவானவர்


பேசும் தமிழன்
ஜூன் 09, 2025 08:46

அனைத்து இந்துக்களுக்கும் ....மானம் .... சூடு....சொரணை வர வேண்டும் என்று தான் மாநாடு நடத்துகிறார்கள் .,... தூங்கி கொண்டு இருக்கும் அவர்களை தட்டி எழுப்ப வேண்டும்.


புதிய வீடியோ