உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பு அகற்றி நிழற்குடை அமைக்கப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றி நிழற்குடை அமைக்கப்படுமா?

பெருமாநல்லுார் : பெருமாநல்லுார் நால் ரோடு பகுதியில் இருந்து திருப்பூர் ரோட்டில் பயணிகள் நின்று பஸ் ஏற ரோட்டின் இரு பகுதிகளிலும் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பயணிகள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து அவதிப்படுகின்றனர்.அப்பகுதி பயணிகள் சிலர் கூறியதாவது: பெருமாநல்லுாரில் இருந்து அதிகளவு மக்கள் திருப்பூரில் பணியாற்றி வருகின்றனர். அதுபோல் பெருமாநல்லுாரை சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்களும் நால் ரோட்டுக்கு வந்துதான் திருப்பூர் மற்றும் பிற ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால், திருப்பூர் செல்லும் ரோட்டில் இருபக்கமும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை.இதனால் வெயில் நேரங்களில் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். மழை நேரங்களில் அங்குள்ள கடைகளில் நின்று கொண்டு பஸ் வந்ததும் ஓடிச்சென்று ஏற வேண்டி உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழற்குடை அமைத்தால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி