உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பு அகலுமா?

ஆக்கிரமிப்பு அகலுமா?

திருப்பூர் : முதலிபாளையம், லட்சுமி நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.அதில், ''முதலிபாளையம் காங்கயம் ரோடு லட்சுமி நகர் வழியாக செல்லும், 30 அடி அகலம் கொண்ட ரோட்டை, ஒரு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து, 15 அடி அகலமாக சுருக்கி பல அடி துாரம் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு உள்ளது. அந்த நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து ரோட்டை மீட்க வேண்டும்,'' என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ