உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயந்திர இறக்குமதிக்கு எளிய நடைமுறை வருமா?

இயந்திர இறக்குமதிக்கு எளிய நடைமுறை வருமா?

திருப்பூர்; திருப்பூர், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் சங்கத்தின், 27வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க மண்டபத்தில் நடந்தது.தலைவர் கோபாலகிருஷ்ணன், தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலர் திருக்குமரன் பேசினார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அமெரிக்க வரி விதிப்பால், பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, அவசர கால தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னலாடை ஏற்றுமதிக்கு பக்க பலமாக இருக்கும், எம்ப்ராய்டரி ஜாப் ஒர்க் நிறுவனங்கள், எம்ப்ராய்டரி இயந்திரங்கள் இறக்குமதி செய்ய எளிமையான உரிம நடைமுறைகளை உருவாக்கவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த மானியங்களை தொடர்ந்து வழங்கவும், மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும் மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எம்ப்ராய்டரி நிறுவனங்கள், தற்போதுள்ள நிலவரப்படி மின் கட்டணம், மூலப்பொருட்கள் விலை, தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, 'பீஸ் ரேட்' அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ